August 18, 2022

புற்றுநோயால் மனைவி அவதி: உறவினர்கள் ஆதரவில்லாததால் நகை மதிப்பீட்டாளர் குடும்பத்துடன் தற்கொலை

கன்னியாகுமரி: மனைவிக்கு புற்றுநோய் மற்றும் உறவினர்களின் பாராமுகம் ஆகியவற்றால் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஆக வேலை பார்த்தவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சியை சேர்ந்த தம்பதி ரமேஷ்- ரோகிணி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ரமேஷ் பணியாற்றி வந்த நிலையில், அவரது மனைவி புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும், அவர்களுக்கு உறவினர்கள் ஆதரவாக இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியை கவனித்து கொள்ள இயலாமல் ரமேஷ் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி, மகள் உள்ளிட்ட மூன்று பேரும் உயிரிழந்து கிடந்தனர்.

பின்னர் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தங்களுடைய இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தங்களுடைய வீடு, வங்கி கணக்கில் உள்ள பணம், இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்தும் சகோதரி மேகலாவுக்கு மட்டுமே உரிமையுள்ளது எனவும் எழுதி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!