October 2, 2022

பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளரை முதல்வர் சந்திப்பாரா?

சென்னை:  முதல்வர் சந்திப்பாரா?… பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஜூலை 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பா.ஜ., சார்பில் திரவுபதி முர்மு; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், யஷ்வந்த் சின்ஹா இடையே நேரடி போட்டி உறுதியாகி உள்ளது.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என, பா.ஜ., கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதால், முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஜூலை 1- முதல், நாடு முழுதும் பயணம் செய்து பிரசாரம் செய்ய முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான 14 பேர் குழு செய்து வருகிறது.அ ப்போது, எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட, முர்மு திட்டமிட்டுள்ளார். ஜூலை முதல் வாரத்தில், சென்னை வர திட்டமிட்டுள்ள முர்மு, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவுஅளிக்குமாறு கேட்க உள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், முர்முவை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!