November 28, 2022

மீண்டும் மகனுடன் இணைந்து நடிப்பாரா?…பிரபல நடிகர். …

ஆந்திரா : தெலுங்கு சினிமாவின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் சிரஞ்சீவி குடும்பத்தினரிடம் இழப்பீடு கோரி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தோல்வியால், இனி தன் மகன் ராம் சரண் உடன் நடிப்பதில்லை என்று திட்டவட்டமாக சிரஞ்சீவி முடிவெடுத்துள்ளார்.

ஆனால் இதை சிரஞ்சீவி மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது ‘ஆச்சார்யா’ படத்தின் தோல்வி என்னை பாதிக்கவில்லை. ராம் சரனுக்கும் பாதிப்பு இல்லை. ஏனென்றால் இயக்குனரின் கூற்றுப்படி படத்தில் நடித்து முடித்துவிட்டோம்.

ஆனால் இந்த படத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை. எதிர்காலத்தில் நாம் இணைந்து செயல்பட மாட்டோம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைத்தால், நேரம் கிடைத்தால், மீண்டும் இணைந்து நடிப்போம். இவ்வாறு சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!