December 8, 2022

நடிகர் சங்கத்தில் இருந்து பிரபல இயக்குனர் நீக்கமா?…

சென்னை : தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர்,சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். பாக்கியராஜ்.

இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் உதவிபுரிந்தார். பின்பு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவராக இருந்த நாசரை எதிர்த்து போட்டியிட்டவர், பிரபல டைரக்டர் கே.பாக்யராஜ்.

அந்த தேர்தலில் .பாக்யராஜ்யை நாசர் வெற்றி பெற்றார். இதையடுத்து பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், கே.பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருடன் நடிகர் உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.இருவருமே சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.அதனால் பாக்கியராஜ் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் என தகவல் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!