August 16, 2022

இன்றைய கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்?

கொல்கத்தா: இன்று கடைசி டி20 போட்டி…இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-ஆவது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (பிப்.20) நடக்கிறது.

கோலிக்கு ஓய்வு: தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) விளையாடி வருவதால் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து விராட்கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி சோபிக்காத விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மிடில் வரிசையில் களம் காண்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்க உள்ளார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக அதிக விலைக்கு (ரூ.15.25 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரராக ஆடும் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கப்படுகிறது. இவர் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் களம் இறங்குகிறார்.

ஒருநாள் தொடரை போல் இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும். இந்திய தொடரில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத வெஸ்ட்இண்டீஸ் ஆறுதல் வெற்றியை பெற பாடுபடும்.

 

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!