August 14, 2022

வாக்களிக்க சென்ற பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்

ராமேஸ்வரம்: போலீசாருடன் வாக்குவாதம்… ராமேஸ்வரம் நகராட்சியின் 19வது வார்டில் வாக்களிக்கச் சென்ற இரு பெண்கள், தங்களது வாக்கை வேறு நபர்கள் பதிவு செய்துவிட்டதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி, முனீஸ்வரி ஆகிய 2 பெண்கள் வாக்களிக்க சென்ற போது, அவர்களது பெயரில் ஏற்கனவே வாக்குகள் பதிவாகி இருந்ததால், தங்களது பெயரில் கள்ள ஓட்டு போட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாக்குவாதம் செய்தனர்.

விசாரணையில், ஒரே பகுதியில் லட்சுமி என்ற பெயரில் 2 பேரும், முனீஸ்வரி என்ற பெயரில் 4 பேரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமியை மட்டும் வாக்களிக்க அனுமதியளித்த அதிகாரிகள், முனீஸ்வரியை அங்கு காத்திருக்க வைத்தனர்.

வாக்குப்பதிவு முடியும் வரை முனீஸ்வரி என்ற பெயரில் யாரும் வரவில்லை என்றால் அவரை வாக்களிக்க அனுமதிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!