சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இது அவரது 3-வது பாராலிம்பிக் பதக்கம். மாரியப்பன் 2016 பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், 2021 பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாரியப்பன் கூறும்போது, “பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்றது பெருமைக்குரியது.
இந்த முறை மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல சென்றேன். ஆனால் போட்டிக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை. பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.
அரசுத் துறையில் வேலை கேட்டிருந்தேன். தருவதாக உறுதியளித்துள்ளனர்,” என்றார்.