உலக கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஹசாரே தொடரை மும்பை அணியின் கேப்டனாக சூர்யா வழிநடத்தினார். அப்போது மும்பை அணி கடும் தோல்வியை சந்தித்தது. சூர்யா கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என வீரர்களும், அணி மேலாளரும் குற்றம்சாட்டினர். அதனால் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “அந்த சூர்யகுமார் வேறு, இப்போது இருப்பவர் வேறு” என்று பதிலளித்தார்.