December 9, 2022

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புதுவிதமான சிறை அனுபவம்…

வட மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹால்த்வானி பகுதியில் பழமையான சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலை ஆங்கிலேயர்களால் 1903 இல் கட்டப்பட்டது. இந்த சிறைச்சாலை ஆரம்ப நாட்களில் சிறைச்சாலையை போன்று தோன்றினாலும் தற்காலத்தில் இது ஒரு ஜெயில் அருங்காட்சியமாக மாற்றிவிட்டார்கள் என்று கூறலாம். ஏனென்றால் இந்த சிறைச்சாலையில் ஒரு நாளைக்கு தங்குவதற்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கான தளமாக மாறியுள்ளது.

சிறைச்சாலையில் ஒரு நாள் தங்குவதற்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த சிறையில் தங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் சிறைக் கைதிகளைப் போல உடைகளும் பின்னே அவர்கள் சாப்பிடுவதற்கு ஈயத்தாலான தட்டும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் கைதிகள் செய்வது போன்ற வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


ஒரு நாள் இரவை சுகமாக கைதியை போல நாம் செலவு செய்யலாம். இப்படி கைதியைப் போல இருக்க வேண்டிய அவசியத்தை உருவாக்குவது அதிகபட்சமாக ஜாதகமே ஆகும். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது போன்ற விஷயங்கள் தான் அதிகபட்சமாக எல்லாரும் இதுபோன்ற இடங்களை நாடி வருகின்றனர். என்னதான் நவீன காலத்தில் வாழ்ந்து இருந்தாலும் வட மாநில மக்கள் இது போன்ற விஷயத்தை இன்னும் நம்பத்தான் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!