இந்தூர்: நம் நாட்டில் 120 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம் நாட்டில் 120 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன.
நாடு முழுவதும், 80 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. முதன்முறையாக நமது நாட்டில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் நாட்டில் 100 சதவீத கவரேஜை ஏற்படுத்த முடியும்.
வடகிழக்கு மாநிலங்களின் பலம் மற்றும் திறன்களின் அடிப்படையில் வளர்ச்சிக்கான வியூகத்தை வகுப்போம். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.