பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத எம்.எல்.சியுமான சூரஜ் ரேவண்ணா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மற்றொரு வாலிபர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சூரஜ் ரேவண்ணா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் தம்பியும் மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அவர் மீது 5 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு நகர கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனிடையே வீட்டுப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரஜ்வாலின் தந்தையும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா (66) கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரஜ்வாலின் சகோதரரும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது மஜதவை சேர்ந்த 27 வயது தொண்டர் ஒருவர் ஒரே பாலின புகார் அளித்தார்.
ஜூன் 16-ம் தேதி, அவர் தனது பண்ணை வீட்டில் ஓரினச்சேர்க்கையை கட்டாயப்படுத்தியதாக புகார் செய்தார். அதன்பேரில், ஹோலநரசிப்பூர் போலீஸார், சூரஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 14 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஹாசனைச் சேர்ந்த 30 வயதான மஜதத் தன்னார்வலர், கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒரே பாலின உடலுறவில் ஈடுபடுமாறு சூரஜ் கட்டாயப்படுத்தியதாக புகார் கூறினார்.
விசாரணை நடத்திய ஹொலேநரசிப்பூர் போலீஸார், சூரஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.