திருப்பதி: திருப்பதி மலையில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
திருப்பதி மலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் பக்தர்களின் மூன்று வாகனங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில் அவற்றை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது