மணிப்பூர்: மணிப்பூரில் அமைதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தவ்பால் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 163 (2) இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.