கோவா: கோவாவில் இரவு நேர கேளிக்கையின் ோது ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இந்த தீவிபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.
இந்த நிலையில், கோவா தீவிபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தேன். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.