சுல்தான்பூர்: அவதூறு வழக்கில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அபிஷேக் சிங் ராணா கூறுகையில், “ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையத்துக்கு வருவார். பின்னர் அவர் சுல்தான்பூர் புறப்பட்டுச் செல்கிறார்” என்றார். 2018ல் அப்போதைய பாஜக தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, உள்ளூர் பா.ஜ., தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த, 2018 ஆகஸ்ட், 4ல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், பிப்ரவரி, 20ல், ராகுல் காந்திக்கு, ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி ஜூலை 26ஆம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார்.