இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதிநிலையை பாதுகாக்கவும், வாடிக்கையாளர்களின் நலனை உறுதிப்படுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால், சில நிறுவனங்கள் விதிகளை மீறுவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சமீபத்தில் நைனிடால் பேங்க், உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக நைனிடால் பேங்கிற்கு ரூ. 61.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடன் வழங்கும் முறைகளில் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தால் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு ரூ. 6.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸுக்கும் KYC வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் ரூ. 5.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், தமிழ்நாட்டில் இயங்கி வந்த PVP கேபிட்டல் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. விதிகளை மீறி செயல்படும் எந்த வங்கியானாலும், ஆர்பிஐ கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது உரிமம் ரத்து செய்யப்படலாம்.