கேரளா: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் உருவில் நெல் மணிகளை விவசாயி வளர்த்துள்ளார். ஆடி மாத புத்தரிசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக இந்த நெல் வளர்ப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில், சுனில் என்பவர் தனது வயலில் ஐயப்பன் உருவில் நெல் மணிகளை வளர்த்துள்ளார். சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும், ஆடி மாத பூஜையுடன் புத்தரிசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிக்கான புத்தரிசியை தனது சொந்த செலவில் சுனில் மட்டுமே வழங்கி வருகிறார். இதற்காக பிரத்யேகமாக நெற்பயிர் வளர்க்கும் சுனில், இந்த ஆண்டு ஓவியர் ஒருவரது உதவியுடன்வயலில் ஐயப்பனை வரைந்து, அதன் மீது நெல் மணிகளை விதைத்து வளர்த்துள்ளார்.