ரஷ்ய அதிபர் புதினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய ஒரு கேள்வி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. “ஈரான் தலைவரை இஸ்ரேல் கொன்றுவிட்டால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த உரையாடல் நடைபெற்றது.

அந்த சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் “ஈரான் தலைவர் காமெனியை இஸ்ரேல் அல்லது அமெரிக்கா கொன்றுவிட்டால் உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?” என்று நேரடியாக கேட்டார். அதற்கு பதிலளித்த புதின், “அந்த மாதிரி சாத்தியங்கள் பற்றி விவாதிக்க விருப்பமில்லை. இது கேள்விக்கான சரியான பதிலாக இருக்குமே என்று நம்புகிறேன்” என்றார்.
இதேவேளை, இந்தக் கேள்விக்கு பின்னணி இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு நேர்காணலில், “நாங்கள் காமெனியின் இருப்பிடத்தை தெரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அவரை கொல்வதில்லை. ஒப்பந்தத்திற்கே வாருங்கள்” என்று எச்சரித்திருந்தார். இந்த உரையின் அடிப்படையிலேயே இஸ்ரேல், காமெனியின் உயிரை இலக்காகக் கொண்டிருக்கிறதா என்பது சந்தேகமாகியுள்ளது.
மேலும், இஸ்ரேல் நடவடிக்கையில் அமெரிக்கா சாய்ந்து இருக்கக்கூடிய சாத்தியம் அதிகம். திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பின்னர் பழியை இஸ்ரேலின் மேல் போட்டுவிடும் திட்டம் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில், ஈரானில் தற்போது அரசியல் பரபரப்புகள் நடப்பதாக கூறப்பட்டபோதிலும், “அங்கு மக்கள் தங்களுடைய அரசை உறுதியாக ஆதரிக்கின்றனர்” என்று புதின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல்களுக்கு முடிவை பேச்சுவார்த்தை மூலமாகவே காண முடியும் என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் வன்முறையையே தூண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.