சென்னை: தலைமுடி உதிர்வுக்கு இருக்கும் மூல காரணங்களில் மிக முக்கியமான காரணமாக இருப்பது பொடுகுத் தொல்லை, பொடுகுத் தொல்லை ஒருவருக்கு இருந்தால் ஆரம்ப காலத்திலேயே அழித்துவிடுவது நல்லது.
இல்லையேல் அது பெரிய அளவிலான தலைமுடி உதிர்வுக்கு வழிவகுக்கும். இந்த பொடுகு தொல்லையை போக்க இயற்கை வழிமுறை உங்களுக்காக.
தேவையானவை:
வேப்பிலை- கைப்பிடியளவுவிளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை: வேப்பிலையினை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு பாத்திரத்தை இறக்கி மூடி வைக்கவும்.
அடுத்த நாள் பாத்திரத்தில் உள்ள வேப்பிலையினை அகற்றிவிடவும்.முதலில் விளக்கெண்ணெயினை லேசாக சூடு செய்து தலைமுடியில் அப்ளை செய்யவும், அடுத்து வேப்பிலை நீர் கொண்டு முடியினை நனைத்து ஊறவிடவும்.
அதன்பின்னர் சீயக்காய் தேய்த்து இதே தண்ணீர் கொண்டு முடியை அலசினால் பொடுகுத் தொல்லை காணாமல் போகும். இயற்கையான இந்த எளிய முறையால் உங்கள் கேசம் பாதுகாக்கப்படும்.