இந்த பொதுவான வகை புற்றுநோயை அடையாளம் காணக்கூடிய வகையிலான ஒரு எளிய ரத்த பரிசோதனை மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளது. இதன் மூலம் இனி எண்ணற்ற குடல் கேன்சர் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும். ஒரு சிறிய பிளட் டெஸ்ட் மூலம் ஒருவர் தனது ஆரோக்கிய நிலையை பற்றிய நுண்ணறிவை பெறலாம்.
தவிர நோய்க்கான சிகிச்சை மற்றும் மீட்புக்கான முன்முயற்சி நடவடிக்கைகளை மேம்படுத்தி கொள்ளலாம். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த அதிநவீன ஸ்கிரீனிங் பற்றியும் மற்றும் கேன்சர் தடுப்பு மற்றும் கண்டறிதலில் எப்படி உதவும் என்பதை பற்றியும் கூறப்பட்டுள்ளது. Guardant Health மூலம் டெவலப் செய்யப்பட்ட இந்த ரத்த அடிப்படையிலான ஸ்கிரீனிங் டெஸ்ட்டானது குடல் புற்றுநோயை 83% வரை கண்டறியும் திறனை கொண்டுள்ளது.
சாதாரணமாக ரத்தம் எடுப்பதன் மூலம் நடத்தப்படும் இந்த சோதனை, ரத்த ஓட்டத்தில் சர்குலேட்டாகும் ட்யூமர் டிஎன்ஏ சிக்னல்களை (tumour DNA signals) அடையாளம் காண்பதன் மூலம் செயல்படுகிறது. குடல் புற்றுநோய் அபாயத்தை கண்டறிய ஒருவர் தனது 45 வயதில் வழக்கமான பரிசோதனையைத் தொடங்க வேண்டும் என்பது U.S. Preventive Services Task Force-ன் பரிந்துரையாகும். தற்போது இந்த கேன்சரை கண்டறிய பயனுள்ள ஸ்கிரீனிங் வழிகளில் மலச் சோதனைகள் மற்றும் colonoscopies உள்ளிட்டவை அடங்கும்.
இந்த சூழலில் குடல் கேன்சரை கண்டறிய புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரத்த பரிசோதனையானது நோயை முன்கூட்டியே கண்டறிதலை எளிதாக்கும். மேலும் இந்த ரத்த பரிசோதனை முயற்சியானது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் குடல் புற்றுநோய் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.
பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் வீரியம் மிக்க பாதிப்புகளை உள்ளடக்கியது இந்த குடல் புற்றுநோய். மேலும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, பெருங்குடல் மற்றும் மலக்குடலை உள்ளடக்கிய குடலானது நம்முடைய செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெருங்குடல் என்பது ஏறக்குறைய 5 அடி நீளமுள்ள தசை குழாயாகும். இது ascending, transverse, descending மற்றும் sigmoid colon உட்பட பல்வேறு பிரிவுகளைக் கடந்து செல்கிறது.
குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் தொடர் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலக்குடல் ரத்த போக்கு, வயிறு அசௌகரியம், காரணமில்லாத எடை இழப்பு மற்றும் நாள்பட்ட சோர்வு, மலம் கழிக்கும் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறிகளாக உள்ளன. தடுப்பு நடவடிக்கை மற்றும் ஸ்கிரீனிங் மூலம் பெருங்குடல் புற்றுநோய் உயிருக்கு ஆபத்தாக மாறும் அபாயத்தைக் குறைக்கலாம். டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து கொள்வது , ஆக்டிவாக இருப்பது, புகையிலை மற்றும் மதுவை தவிர்ப்பது மற்றும் வழக்கமான பரிசோதனைகள் உள்ளிட்டவை அவசியம்.