கரூர்: புதிதாக கட்சி தொடங்கும் நபர்கள் முதலமைச்சர் நான் தான் என்று பேசி வருகிறார்கள் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் அதன் பிறகு தெரியும் எவ்வளவு சிரமம் என்று தெரியும் என நடிகர் விஜய்யை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம் செய்தார்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் தலைமையில் உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் கரூரில் நடைபெற்றது.
இதில், கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி என நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு ஒன்றிய,நகர, பேரூராட்சி, ஊராட்சி வார்டு கழக செயலாளரிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமைச்சீட்டு களை வழங்கப்பட்டது.. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , புதிதாக கட்சி தொடங்கும் நபர்கள் முதலமைச்சர் நான் தான் என்று பேசி வருகிறார்கள் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் அதன் பிறகு தெரியும் எவ்வளவு சிரமம் என்று தெரியும் என நடிகர் விஜய் மறைமுகமாக விமர்சனம் செய்தார். அதிமுகவை அழிப்பதற்கு எந்த கொம்பனும் கிடையாது. அம்மாவின் இறப்புக்கு பிறகு கட்சியை சிறப்பாக அம்மாவின் வழியில் நடத்தி வருகிறோம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.