சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்ததாக கூறப்படும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் தலையீடு இன்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு, அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.