தஞ்சாவூர்:மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக ஆட்சியை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை எம்.பி. ச. முரசொலி, எம்எல்ஏ. டி கே ஜி நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், து. செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஜித்து, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும், துணை மேருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாநகர நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, சரவணன் சுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் செல்ல கண்ணு, ஒன்றிய துணைத் தலைவர் அருளானந்த சாமி, வல்லம் நகர திமுக செயலாளர் டி.கே.எஸ்.ஜி.கல்யாணசுந்தரம், பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் நன்றி கூறினார்.