கோவை: கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ராஜநாத் சிங் கலந்து கொள்கிறார். ஏன் கலைஞர் நாணயத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வைத்து வெளியிடலாமே என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய கூட்டணி இருக்கிறது. கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் வெறும் 10 சதவீத பணிகளை மட்டும் செய்துவிட்டு திமுக திறந்து வைத்துள்ளது.
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ராஜநாத் சிங் கலந்து கொள்கிறார். ஏன் கலைஞர் நாணயத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வைத்து வெளியிடலாமே.? ஏன் ராஜ்நாத் சிங்கை வைத்து வெளியிடுகிறார்கள். முதலில் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த ஸ்டாலின் அதன்பின் கலந்து கொண்டாரே ஏன்.
மேலும் இதை வைத்து பார்க்கும்போது பாஜக மற்றும் திமுக இடையே ரகசிய கூட்டணி இருப்பது போல் தோன்றுகிறது என்றார்.