சென்னை: காங்கிரஸ் கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்வது கூட்டணியை பலவீனப்படுத்தும் செயல் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை இருப்பதாகவும், காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் இந்தியா கூட்டணியும் வலுவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.