புதுடில்லி: பாஜக முதலமைச்சர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த நிலையில் பாஜக முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.