ஊட்டி: குன்னூர் பகுதியில் சாலையோரங்களில் பூத்துள்ள ரெட்லீஃப்,
பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ரெட்லீஃப், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது, நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்களிலும் சாலையோரங்களிலும் காணப்படும் சிவப்பு-பூக்கள் கொண்ட மரமாகும். தற்போது இந்த மரங்களில் பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன.
இந்த வகைப் பூக்கள் இலைகளிலிருந்து 4 நிறங்களுக்கு மாறி, பார்ப்பவர்களைக் கவரும். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள மரங்களில் ரெட்லீஃப் பூக்கள் பூத்துள்ளதால், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர்.
தூரத்தில் இருந்து பார்த்தாலும், இந்த மரங்களின் இலைகள் பூக்கள் போல் இருக்கும். முதலில் அது சிவப்பு நிறமாகத் தோன்றும், பின்னர் சில நாட்களில் அது பல நிறமாக மாறும். குன்னூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் ரெட்லீஃப், பூக்கள் அதிகளவில் நடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. தற்போது ரெட்லீஃப், பூக்கள் பூக்கும் சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.