சென்னை: கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில் ‘ட’ வடிவில் அமைந்துள்ள செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளில் புதிய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.
புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே தனியார் நிலத்தில் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். 1.5 ஏக்கர் பரப்பளவில் எட்டு குழிகள் அமைத்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஒரு குழியில் தோண்டியபோது செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சுவர் மேற்குப் பகுதியில் வலது புறமாக திரும்பி ‘ட’ வடிவில் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு சங்ககால நகரமைப்பு குறித்த புதிய தகவல்களை வெளிக்கொண்டு வரக்கூடும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.