தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு கலைஞர் நகர், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, 84 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கி சிறப்புரையாற்றினார். தி.மு.க தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல் முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியக்கழக செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், குழ.செ.அருள்நம்பி, எஸ்.ஞானப்பிரகாசம், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், பெருமகளூர் பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட நிர்வாகி முத்துவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் மருததுரை, கிராம நிர்வாக அலுவலர் சிவா மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினருமான பூமிநாதன் வரவேற்றார். நிறைவாக, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.