வேலூர்: போலீசாருடன் வாக்குவாதம்… வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தனது காருக்கான ஆவணங்களை காண்பிக்க மறுத்த அகரத்தைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் என்பவர் அந்த காரை அப்படியே நடு ரோட்டில் நிறுத்தினார்.
இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படவே போலீஸாருக்கும் சுதாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.