ஆளுநரை எதிர்ப்பது என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பரம் மற்றும் அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமல், நிதி நிர்வாகம் செய்யாமல் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தில் அரசு நடத்தும் 13ல் 12 பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன என்ற செய்தி கவலை அளிக்கிறது. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான சம்பளம், கட்டுமானப் பராமரிப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே நிதி இல்லாத அளவுக்கு தமிழகத்தின் பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
திராவிட இயக்கத்தின் அடித்தளமாக விளங்கும் கல்வியின் பீடமாக விளங்கும் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க முடியாத மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியை “திராவிட மாடல்” என்று முத்திரை குத்துவது வெட்கக்கேடானது. ஆளுநரை எதிர்ப்பது என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பரம் மற்றும் அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமல், நிதியை நிர்வகிக்காமல் மாணவர்கள் எதிர்காலத்துடன் விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி, அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமையை உடனடியாக ஆய்வு செய்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.