ஐடி ரெய்டு நடக்கும் என வருமான வரித்துறை அதிகாரி போல் பேசிய டிரைவரை போலீசார் கைது செய்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து தொழிலதிபர்களை ஏமாற்றி வந்த விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விக்னேஷ்குமார் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் ஓட்டுநராக பணிபுரிந்தார். வருமான வரித்துறை அதிகாரி என கூறி பல தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு ஐடி ரெய்டு வரும் என்றும் பணம் கொடுத்தால் ஐடி ரெய்டு வராது என்றும் கூறி தொடர் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதேபோல், சமீபத்தில் தொழிலதிபரை மிரட்டியபோது, தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்னேஷ்குமாரை போலீசார் குறிவைத்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.