சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 66 பேர் போலி சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னையில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவிநேது 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
அவர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தனர். தமிழக மக்கள் சேவையில் பிரதமரின் அக்கறை, தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலால் பிரதமரை சந்தித்து பயனடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என எக்ஸ் இணையதள பக்கத்தில் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் கவர்னர் சந்தித்து பேசினார்.
அவர் விரைவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. வரும் 19ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.