சிவகங்கை: ‘தமிழகத்திற்கு தம்பிடி பணத்தை கூட மத்திய அரசு தரக்கூடாது’ என, பா.ஜ.க, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
இந்த பேட்டியில் அவர் அளித்துள்ளதாவது:
கட்சி மற்றும் அரசு துறைகளில் முதலமைச்சருக்கு கட்டுப்பாடு இல்லை. எனவே அவர் உடனடியாக பதவி விலகுவது தமிழகத்திற்கு நல்லது. போதைப்பொருள் பாவனையே அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியாக உள்ளது.
சென்னை வெள்ள வடிகால்க்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.5,000 கோடிக்கு தமிழக அரசு கணக்கு காட்டாத வரையில் தமிழகத்துக்கு ஒரு காசு கூட மத்திய அரசு தராது; கொடுக்கவும் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.