சென்னை: இயக்குனர் அமீர், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இவர் பேட்டி அளிக்கும் போது, அவரது பக்கத்தில் நின்ற இளைஞர் ஒருவர், விஜய் புகைப்படம் இடம் பெற்ற கீச் செயினை கேமராவிற்கு காட்டி சிரித்தார்.
இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாற்று கட்சி பிரமுகர்களின் பேச்சுகள் நடக்கும் போது தவெகவினர் இப்படிச் செய்யும் நடத்தை அநாகரீமானது என்றும் விமர்சிக்கப்பட்டது.

அமீர் பேட்டி மேலும், “விஜய் தனி விமானத்தில் பயணம் செய்கிறார்; மக்களோடு நேரில் பேசவில்லை; கட்சி ஆரம்பித்து இரண்டு வருடமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை” எனக் கூறினார். இவர், தவெகவின் மாநாட்டில் எழுப்பப்பட்ட சில பழங்கால நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் பரவியதும், கருத்து சுதந்திரம், நடத்தை வரம்பு போன்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.