உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்ட லட்டு, முறுக்கு வியாபாரி மூலம், 1.51 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கிராமத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.
இந்த சிலையின் கையில் ஒரு கரண்டி இருந்தது. பூஜைகள் முடிந்து நேற்று கண்மாயில் கரைக்க சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக விநாயகர் வைத்திருந்த லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.
இதில், அதே ஊரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி மூக்கன் கலந்து கொண்டு, லட்டுவை 1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். இதனால், ஆச்சரியமடைந்த கிராம மக்கள் இனி ஆண்டுதோறும் விநாயகர் சிலைக்கு வைத்து வழிபடும் லட்டுகளை ஏலம் விடுவார்கள்.
ஏலம் விடப்பட்ட மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஏலத்தொகை வழங்கப்படும் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் வழங்கப்படும் என அறிவித்தனர்.