தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாயை வழங்கவுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், தனது உரையில், “இந்த திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வியில் செல்லும் வழியை திறக்க உதவும். ஏதாவது காரணத்தால் ஒரு மாணவர் கூட உயர் கல்வியை விட்டுவிடக் கூடாது,” என்று கூறினார். “தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம், மாணவர்களின் வளர்ச்சியை, அடுத்தடுத்து ஆண்டுகளிலும் கண்காணிப்பேன்,” எனக் கூறியுள்ளார்.
முதல்வர் மேலும், “தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர வேண்டும். இதற்காக, புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துகிறோம்,” என்று கூறினார். தமிழ் புதல்வன் திட்டத்தின்மூலம், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மேலும் 3 ஆண்டுகள் படிக்கும் பட்டப் படிப்புகள், 4 ஆண்டுகள் பொறியியல், 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்புகள் போன்ற மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாயாக வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மூலம், 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாயாக வழங்கப்படும். “எங்கள் திராவிட மாடல் அரசு, சமூகநீதியைக் காப்பாற்றும் நோக்குடன் செயல்படுகிறது,” எனுக் கூரிய முதல்வர், மாணவர்களுக்கு கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் அளிக்கும் இந்த திட்டத்தை பெருமையுடன் தொடங்கி வைத்தார்.