சிங்கம்புணரி: யாருய்யா நீ… வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கொத்தனாரை கொத்தாக தூக்கி சென்றுள்ளனர் போலீசார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொத்தனாரான அவர், எம்.வி.எஸ். நகரில் வசிக்கும் வீட்டின் பின்புறத்தில் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்ததாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அங்கு சென்று கஞ்சா செடியை அகற்றி, முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.