உதகை: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செபந்தோடு கிராமம் ஒட்டி புல்லட், கட்டை கொம்பன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து விஜய், வாசிம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.