டெல்லி: அறிமுகப்படுத்தப்பட்டது… ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் காரின் ஃபேஸ் லிப்ட் மாடல் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சாவியாக பயன்படுத்தும் வசதியுடன், 6 ஏர் பேக்குகள், விமானத்தில் இருப்பது போல் முன் இருக்கையின் பின்புறம் லேப்டாப் பயன்படுத்தும் ஸ்டாண்டு வசதியுடன் புதிய சென்சார் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
7 பேர் மற்றும் 6 பேர் பயணிக்கும் வகையில் இரு வேறு மாடல்களில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் அல்ஹாசார் கார் ஸ்டார்ட் செய்த 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் காரின் ஆரம்பவிலை 14.99 லட்சம் என்றும் டீசல் கார் 15.99 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டது.