August 14, 2022

முன்னாள் முதல்வர் கலைஞர் படைப்புகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கை தொடங்க நடவடிக்கை

தஞ்சாவூர்: தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படைப்புகளை ஆய்வு செய்யும் வகையில் அவரது பெயரில் தமிழக அரசின் சார்பாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை மற்றும் அலுவல் நிலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இரண்டு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படைப்புகளை ஆய்வு செய்யும் வகையில் அவரது பெயரில் தமிழக அரசின் சார்பாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தமிழ் வழியில் குறைந்த கட்டணத்துடன் தொலைநிலைக்கல்வி படிப்புகளைப் பயில்வதற்குக் காரணமாக இருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி படிப்புகளைத் தொடர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் தொடர்பில்லாத போலி சமூக ஆர்வலர்கள் நெடுஞ்செழியன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி 5 ஆண்டுகள் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற முருகேசன் ஆகியோரின் தவறான சுயநல செயல்பாடுகளைத் தடுத்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக ஆளுநர், தமிழக அரசு மற்றும் துணைவேந்தர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதுவது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது. மாணவர்களின் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களின் தவறான நடவடிக்கைகளை தடுத்திடும் வகையில் செயல்படுவது, தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு A++ தேசியத் தரமதிப்பீட்டு மதிப்பெண் பெற்றுத் தருவதற்கு பங்களிப்பு வழங்குவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையும், அலுவல்நிலை பணியாளர்கள் சங்கமும் இணைந்து செயலபடும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சிக்காகவும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்சார்ந்தும் செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

ஆசிரியர் பேரவைத் தலைவர் இளையாப்பிள்ளை, அலுவல் நிலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் .சக்திசரவணன் ஆகியோர் கூட்டமைப்பு அவசியத்தை விளக்கி பேசினர். முனைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!