ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பால் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தை குறியீடுகள் நடுநிலையான குறிப்பில் வர்த்தகத்தைத் தொடங்கின. இருப்பினும், எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகளில் முதலீடுகள் அதிகரித்ததால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
நிஃப்டி 50 குறியீட்டில், உலோகங்கள் தவிர அனைத்து துறை பங்குகளும் உயர்வுடன் முடிவடைந்தன. தொடர்ந்து ஆறு நாட்கள் சரிவைக் கண்ட குறியீட்டு எண், ஒரு சதவீத லாபத்துடன் முடிந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பை தொடர வாய்ப்புள்ளதால், அடுத்தடுத்து பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.5,730 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர். உலகளாவிய கச்சா எண்ணெய் விலை நேற்று 1.84 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 79.44 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.83.97 ஆக உள்ளது.
இந்த பின்னணியில், ட்ரெண்ட், பெல், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன. இருப்பினும், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டைட்டன், பஜாஜ் பின்சர்வ் மற்றும் ஜேஎஸ்எஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை அதிக நஷ்டத்தை சந்தித்தன.