December 8, 2022

சீனாவில் புதிதாக 901 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெய்ஜிங் : உலகின் முதல் முதலில் கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றியது. அதன்பின், உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பல்வேறு நாடுகள் படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 901 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,48,984 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!