October 5, 2022

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்றாலும் அவ்வப்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!