September 29, 2022

தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி; வாலிபர் மீது புகார்

தஞ்சை, பிப்.27-தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி கடன் வசூல் தொகை ரூ.4.80 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (41). இவர் மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எங்களது நிதி நிறுவனத்தில் கந்தர்வக்கோட்டை அருகே  தச்சன்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் ராஜினாமா செய்வதாக எங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. மேலும் மணிகண்டன் வாடிக்கையாளர்களின் கடன் வசூல் தொகையில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 203 மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து கேட்க அவரை பல முறை தொடர்பு கொண்டும் முயற்சி செய்தும் முடியவில்லை. அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!