பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டோனா பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 6.4 மற்றும் 6.6 ரிக்டர் அளவுகளில் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவலின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32-ஐ தாண்டியுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.