October 5, 2022

இலங்கை: தூதரங்களை மூடி முடிவு… பொருளதார நெருக்கடி காரணமாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இலங்கையில், நிதிச்சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்துள்ளதாக வெளியாகி உள்ளது.

நார்வேயின் ஒஸ்லோ நகரில் உள்ள தூதரகம், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை தற்காலிகமாக மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!