December 10, 2022

இந்தயாவுக்கு மரண பயத்தைக் காட்டிய டேவிட் மில்லர் – டி காக்…..

கவுகாத்தி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி இறுதி வரை வெற்றிக்காக போராடியது. அந்த அணி 221 ரன்கள் குவித்திருந்தது. இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் சதம் அடித்தார். டி காக் 69 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர்.

ரோஹித் 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ராகுல் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். 57 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தார். அப்போது கோஹ்லியும், சூர்யகுமார் யாதவும் இணைந்து விளையாடினர். சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

Axar Patel of India celebrates the wicket of Josh Inglis of Australia during the 3rd T20I match between India and Australia held at the Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad on the 25th September 2022
Photo by Faheem Hussain / Sportzpics for BCCI

அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இருவரும் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். பின்னர் களம் இறங்கினார் தினேஷ் கார்த்திக். அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். மறுபுறம் கோஹ்லி 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 237 ரன்கள் எடுத்தது.

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி துரத்திய தென்னாப்பிரிக்க அணி  இரண்டு ஓவர்கள் முடிவில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 7வது ஓவரில் மார்க்ரம் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் டேவிட் மில்லர் மற்றும் டி காக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு இணைந்து 174 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட  நிலையில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகப்படியாக மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப், ஹர்ஷல், அக்ஷர் ஆகியோர் நான்கு ஓவர்கள் வீசி அதிக ரன்களை கொடுத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!