September 27, 2022

ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை – பிரதமர் மோடி

டெல்லி : டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது.

ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது. மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனமயமாக்க வேண்டும். அதன்மூலம் விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய முடியும், உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும்.

எளிதான வாழ்க்கை, வெளிப்படையான சேவை வழங்குதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும். சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!