December 2, 2022

இரண்டு முறை புக்கர் பரிசை வென்ற புகழ்பெற்ற எழுத்தாளர் மரணம்

லண்டன் : இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆங்கில நாவலாசிரியர்களில் ஒருவர் ஹிலாரி மாண்டல் என்று ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் இரண்டு முறை புக்கர் பரிசை வென்றவர். அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான வோல்ப் ஹால் மற்றும் அதன் தொடர்ச்சியான பிரிங் அப் தி பாடி நாவலுக்காக புக்கர் பரிசை வென்றவர்.

அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான வோல்ப் ஹால் புத்தகம் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. அவர் 17 புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது வாசகர்களிடமிருந்து அளவுக்கரிய பாராட்டைப் பெற்றவர் ஆவார்.

அவர் 1952 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷையரில் உள்ள க்ளோசாப்பில் பிறந்தார். அவரது 27 வயதில் அறுவைசிகிச்சை செய்து, மாதவிடாய் நிறுத்தத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்தது. இதனால் அவரால் குழந்தைகளைப் பெற முடியவில்லை. இந்நிலையில், எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார். இந்த தகவலை ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!